Breaking News

2 நாட்களுக்கு சென்னையில் இந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

2 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்


சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய S-7 எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை X மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு KEC CMRL பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து சீராக செல்ல வேண்டி பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

• கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை axis bank வழியாக வந்து வலது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை கீழ்கட்டளை நோக்கி செல்லலாம். வழியாக

• கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback