Breaking News

2 நாட்கள் லிப்டிற்குள் சிக்கி தவித்த நபர்.! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 59 வயது நிறைந்த ரவீந்திரன் நாயர் என்பவர் கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவமனையின் 2வது மாடிக்கு செல்வதற்காக அவர் லிப்டில் ஏறியுள்ளார். ஆனால் லிஃப்ட் மேலே செல்வதற்கு பதில் கீழே சென்று தரைத்தளத்தில் நின்றுவிட்டது. கதவும் திறக்கவில்லை. இதனால் லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட ரவீந்திரன், அதில் இருக்கும் பட்டன்கள் அனைத்தையும் அழுத்தி பார்த்துள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை. அலாரம் பட்டனும் செயல்படவில்லை. அவரது மொபைலும் சார்ஜ் இல்லாததால் சுவிட் ஆப் ஆகி இருந்ததால், யாரையும் அவரால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.... என்ன செய்வது என்று தெரியாமல் அதற்குள்ளேயே இருந்துள்ளார். 


இந்நிலையில் ரவீந்திரன் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களும் பல இடங்களில் ரவீந்திரனை தேடியுள்ளனர். 

சனிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்ற நாயர், திங்கள்கிழமை காலையில், லிஃப்ட் ஆபரேட்டர் வந்து லிஃப்ட்டை ஆபரேட் செய்து பார்த்தபோதுதான், அதற்குள் ஒருவர் சிக்கியிருக்கிறார் என்பதையே அறிந்து உடனடியாக உதவிக்கு அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவரை மீட்டு உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

உயிர் பிழைத்த ரவீந்திரன் இதுகுறித்து கூறுகையில், 

நான் லிப்டில் சிக்கியதும் லிட்டில் இருந்த எச்சரிக்கை பட்டனையும் அழுத்திதேன். ஆனால் யாரும் உதவ வரவில்லை.  சிறிது நேரத்தில் வெளியே வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். வினாடிகள் மணி நேரங்களாகின. நான் சிக்கியிருப்பது கூட யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து அவசரகால பொத்தானை அழுத்திக்கொண்டே இருந்தேன். ஒரே ஒரு சிறிது துளையின் மூலம் காற்றும் லேசான ஒளியும் கிடைத்தது.அந்த 42 மணி நேரமும் நான் நம்பிக்கையை மட்டும் விடாமல் காத்திருந்தேன்

ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில நேரங்களில் கத்தி சத்தமாக அழுதேன். என்னால் தூங்கவே முடியவில்லை. தொடர்ந்து எச்சரிக்கை பட்டனை அழுத்திக் கொண்டே இருந்தேன். லிப்டுக்குள் ஃபேன், வெளிச்சம் இல்லை என்றாலும் காற்று சற்று நுழைந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது என தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback