குவைத்தில் திருமணம் நடந்த 3வது நிமிடத்தில் கணவரை விவாகரத்து செய்த பெண் காரணம் என்ன தெரியுமா!Kuwait Couple Divorces Within 3 Minutes Of Getting Married
Kuwait Couple Divorces Within 3 Minutes Of Getting Married குவைத்தில் திருமணம் நடந்த 3வது நிமிடத்தில் கணவரை விவாகரத்து செய்த பெண் காரணம் என்ன தெரியுமா!
திருமணம் முடிந்து நடந்து சென்றபோது, கால் தடுக்கி கீழே விழுந்த மணமகளை ‘முட்டாள்' என திட்டிய மணமகனிடம் இருந்து விவாகரத்துக் கோரி, திருமணம் முடிந்த 3வது நிமிடத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளார் 2019ல் நடந்த இச்சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
அரபு நாடான குவைத்தில் கடந்த 2019 ம் ஆண்டு தம்பதியினர் தங்களது உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மணமகள் படிக்கட்டில் இருந்து கீழ இறங்கிய போது கால் இடறி விழுந்தார். கீழே விழுந்த மணமகளுக்கு கை கொடுக்காமல், மணமகன் மணமகளை பார்த்து கோபத்தில் 'முட்டாள், பார்த்து நடக்க மாட்டியா' என்ற வார்த்தையை சொல்லி திட்டியுள்ளார்.
இந்த வார்த்தையை கேட்ட அதிர்ச்சி அடைந்த மணமகள் இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்குமோ என பயந்து விவாகரத்து செய்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்