300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம் அல்லா சாமி ஊர்வலம் நடத்தி தீ மிதித்து மொஹரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் முழு விவரம் வீடியோ இணைப்பு Pudur village moharram
300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம் அல்லா சாமி ஊர்வலம் நடத்தி தீ மிதித்து மொஹரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் முழு விவரம் வீடியோ இணைப்பு Pudur village moharram
மொஹரம் இஸ்லாமியர்களின் பண்டிகையாக இருந்தாலும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக காசவளநாடு புதூர் கிராமத்தில் வசித்து வரும் இந்துக்கள் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பான்மையாக இந்துக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 4 முஸ்லிம் குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர் ஆனால் வெளியூரில் வசிக்கும் பலர் இந்த மொஹரம் பண்டிகைக்கு ஊருக்கு வந்துவிடுகின்றார்கள்
மேலும் மொஹரம் பண்டிக்கைக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே விரதத்தை துவங்கி, செங்கரையில் உள்ள சாவடியில் உள்ளங்கை போன்ற உருவத்தை 'அல்லா சுவாமி' என வைத்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்திஹா ஓதி வழிபாடு நடத்துகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மொஹரம் அன்று அல்லா சாமி வீதி உலா வரும் அப்போது கிராம மக்கள் தங்கள் வீடுகளில் தேங்காய் மற்றும் பழங்களை வைத்து கற்பூரம் ஏற்றி மாலை மற்றும் பட்டு துண்டு அணிவித்து வழிபாடு நடத்தி வரவேற்க்கின்றார்கள்
வீதி உலா முடிந்ததும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி வழிபடுகின்றார்கள்
இந்த திருவிழா குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில்:-
புதூர் கிராமத்தில், குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் ஒரு உலோகம் கிடைத்தது. அதை அல்லாவின் கையாக கருதி, அதற்காக கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம் என்கிறார்கள் மேலும் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொஹரம் திருவிழாவின் போது பிறந்த வீட்டுக்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.
திருவிழா வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=PTzaVO3gfrk
Tags: மார்க்க செய்தி வைரல் வீடியோ