கனமழை காரணமாக இன்று 30.07.2024 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீலகிரியில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நீலகிரியில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்