பராமரிப்பு பணி காரணமாக 31ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றங்கள் முழு விபரம் tambaram train schedule
தாம்பரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக 31ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றங்கள் முழு விபரம்
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மேலும் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
தாம்பரம் - நாகர்கோயில் முன்பதிவில்லா அந்தியோதியா விரைவு ரயில் முழுவதுமாக ரத்து
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்
எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்
தாம்பரம் - ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை இயக்கப்படும்
காரைக்குடியில் இருந்து எழும்பூர் வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும் எழும்பூர் வரை செல்லாது.
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.
அதேபோல ராக் போர்ட் எக்ஸ்பிரஸ் எண்12653 ஜூலை 23 முதல் ஆக. 17ம் தேதி வரை சென்னை எழும்பூரிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டி லிருந்து புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கூடூா் வழியாக இயக்கப்படவுள்ளன
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/GMSRailway/status/1812845266434773016
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி