பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம் முழு விவரம்
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம் முழு விவரம்
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி. அனைத்து நுகா்வோா் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளாா்.
இவா் கடந்த 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்துக்குச் சென்று பாா்சல் சாப்பாடு ரூ.80 வீதம் 25 சாப்பாடுகளை வாங்கியுள்ளார் மேலும் பில் கேட்டபோது, கடையின் உரிமையாளா் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்தாராம்.
இந்த நிலையில், ஆரோக்கியசாமிக்கு வழங்கப்பட்ட பாா்சல் சாப்பாட்டில் உணவகம் கூறியபடி ஊறுகாய் வைக்காததால் உடனே கடைக்கு சென்று ஊறுகாய் வைக்கவில்லை எனவே 1 பார்சலுக்கு 1 ரூபாய் வீதம் 25 பார்சலுக்கு ரூபாய் 25 ததருமாறு கேட்டுள்ளார் ஆனால் உணவக உரிமையாளர் மறுத்துவிட்டாராம்.இதனால், மன உளைச்சலுக்குள்ளான ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு . இந்த வழக்கு தாக்கல் செய்தார்
அந்த வழக்கை விசாரனை செய்த நீதிமன்றம் ஆரோக்கியசாமிக்கு வழங்கப்பட்ட பாா்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடாகும். இதனால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலங்களுக்குரிய தொகை ரூ.25, சாப்பாடு வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை தீா்ப்பு வழங்கப்பட்ட 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் சோ்த்து பணத்தை வழங்க வேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்