Breaking News

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறை 39 பேர் பலி நடந்தது என்ன முழு விவரம் 2024 Bangladesh quota reform movement

அட்மின் மீடியா
0

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறை 39 பேர் பலி நடந்தது என்ன முழு விவரம் 2024 Bangladesh quota reform movement

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது,

அதாவது அரசு வேலைவாய்ப்புகளில் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரா்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கிட்டை ரத்து செய்து உத்தரவிட்டது . உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாணவர்களின் போராட்டத்திற்க்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 


இந்நிலையில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 

போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கைலைகழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

மேலும் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்கதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் மாணவா்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

போராட்ட வன்முறை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/FuadAnik2/status/1813851202079301926 

போராட்ட வன்முறை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/palkisu/status/1813950931400331712

போராட்ட வன்முறை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/nabilajamal_/status/1813988060327268479/video/1

போராட்ட வன்முறை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/nawshinflora/status/1813882313878700308/video/1

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback