ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் அதிரடியாக கைது முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் அதிரடியாக கைது..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் திருவேங்கடம் என்ற நபர் தப்பியோட முயன்றதற்காக சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவரான திமுக வழக்கறிஞர் அருள் என்பவரிடம் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசியது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீசார் அதனடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன் ,சதீஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும், வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்து மலர்க்கொடி கைது செய்யப்பட்டதாகவும் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக துணைச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் இந்த மலர்கொடி உள்ளார்,
Tags: தமிழக செய்திகள்