3 பேர் பலியாக காரணமான ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்க்குள் மழைநீர் புகுந்தது எப்படி? வெளியான பரபரப்பு வீடியோ..!
டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலி. என்ன நடந்தது? முழு விவரம்
டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரால் 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ராஜேந்திர நகரில் ராவ் ஐ.ஏ.எஸ் கோச்சிங் செண்டர் என்ற பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் தரை தளத்தில் உள்ள அறையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் வழக்கம் போல தேர்வுகளுக்காக படித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக இரவு 7 மணியளவில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்கு வெள்ளம் போல தண்ணீர் புகுந்து. இதில் ஒரு இளம்பெண் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் ஒருவரை காணவில்லை.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையிர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி மையத்தின் தரைதளத்தில் தான், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான 80 சதவீத புத்தகங்கள் இருந்து இருக்கின்றன. இதனால், நேற்று இரவு 7 மணியளவில் இந்த நூலகத்தில் மாணவ - மாணவிகள் பலர் இருந்தனர். அப்போது பலத்த மழை காரணமாக பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
டெல்லியில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு அளித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/ndtvindia/status/1817609487114772951
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/anandshlive/status/1817369217747837409
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/_vz_vijay/status/1817474495285690730
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Talk_Narender/status/1817624857934508064
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/kingsumitarora/status/1817399399770968174/video/4
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/kingsumitarora/status/1817399399770968174/video/1
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ