Breaking News

மனைவி உட்பட 42 பெண்கள் கொடூரக் கொலை செய்த சீரியல் கில்லர் கைது வீடியோ இணைப்பு Serial killer caught in Kenya

அட்மின் மீடியா
0

மனைவி உட்பட 42 பெண்கள் கொடூரக் கொலை செய்த சீரியல் கில்லர் கைது வீடியோ இணைப்பு Serial killer caught in Kenya


கென்யாவின் தலைநகர் நைரோபியின் சோவெட்டோ பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 11-ம் தேதி வழக்கிற்க்கு மாறன துர்நாற்றம் வரவே  ஆய்வு செய்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ,அங்கிருந்த 9 சாக்கு மூட்டைகளில் இருந்து துர்நாற்றம் வரவே போலீசாருக்கு தகவல் அளித்தனர்

சுமார் 9 சாக்குமூட்டைகளை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பைக்குள் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டு சடலமாக பெண்கள் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை பிடிக்கதீவிர விசாரணையில் இறங்கினர். கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் செல்போனை  ஆய்வு செய்ததில் 33 வயதான காலின்ஸ் ஜுமைசி கலூஷா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்து காலின் ஜுமைசி வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிடைத்த பொருட்கள் மூலம், அவர் தான் சீரியல் கில்லர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்

அதனை அடுத்து 9 பெண்களை கொலை செய்தது நான் தான் என்று அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டு, முதலில் தனது மனைவியை கொலை செய்தாக கூறிய காலின்ஸ் ஜுமைசி, அடுத்தடுத்து பல இளம் பெண்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதுவரை, 42 பெண்களை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார் சைக்கோ கில்லர் காலின்ஸ் ஜுமைசியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/06angarali68/status/1812871302945886414

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback