Breaking News

மத்திய அரசின் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil

அட்மின் மீடியா
0

How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil மத்திய அரசின் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதமாக நோக்கில் மத்திய அரசு 'Ayushman Bharat', 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (AB-PMJAY) என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது

70 வயதை கடந்த அனைத்து இந்திய மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://abdm.gov.in/

தமிழக அரசு மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அதேபோல மத்திய அரசும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. 

முதலில் மத்திய அரசின் https://abdm.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் create ABHA number என்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் ஆதார் எண்ணை வைத்து உள் நுழை என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் உங்கள் ஆதார் கார்டு எண்ணை பதிவிடவும்

அதன்பின்பு உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். 

இந்த எண்ணை பதிவிட்டு உள்ளே போக வேண்டும்.உள்ளே நுழைந்ததும் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback