Breaking News

தற்காலிக பணியில் உள்ள 5,146 ஆசிரியா் பணி நிரந்தரம் அரசாணை வெளியீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தற்காலிக பணியில் உள்ள 5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரம் அரசாணை வெளியீடு முழு விவரம்


தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் தற்காலிகமாக நியமணம் செய்யப்பட்ட 5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் 

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் என மொத்தம் 5,146 ஆசிரியா் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடா் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே, தேவை அடிப்படையில் இந்த 5,146 தற்காலிக பணி இடங்களையும் நிரந்தரமாக்க தொடக்கக் கல்வி இயக்குநா் அரசுக்கு கருத்துரு அனுப்பினாா்.அதையேற்று, நிதித்துறை ஒப்புதலுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் உள்ள 1,581 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது. 

இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback