ஓமான் மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு இந்தியர் உட்பட 6 பேர் பலி 30 க்கும் மேற்பட்டோர் காயம் வீடியோ இணைப்பு 2024 Muscat mosque shooting
ஓமான் நாட்டில் மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு 6 பேர் பலி 30 க்கும் மேற்பட்டோர் காயம் வீடியோ இணைப்பு 2024 Muscat mosque shooting
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியா மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
இஸ்லாமியர்கள் இந்த மொஹரம் மாதத்தில் ஆஷூரா நோன்பு கடைபிடிக்கின்றார்கள் மேலும் ஷியாக்கள் இது ஏழாம் நூற்றாண்டில் நடந்த போரில் முகமது நபியின் சரியான வாரிசாகக் கருதப்படும் இமாம் ஹுசைனின் போரில் இறந்ததை நினைவுகூரும் வருடாந்த துக்க நாளைக் குறிக்கிறது. அந்த நாளை முன்னிட்டு தலைநகரின் அல்-வாடி அல்-கபீர் பகுதியில் உள்ள மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை நடத்தினார்கள், அதிகாலை பஜர் தொழுகை முடித்து வெளிவந்த மக்கள் மீது திடிரென இயந்திர துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள் .
இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்த மூன்று பேர் இருந்துள்ளார்கள், அந்த 3 பேரும் போலீசாரின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர், இந்த தாக்குதலில் போலிசார் உட்பட 6 பேர் பலியாகி உள்ளார்கள், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்
மேலும் இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில்
ஜூலை 15 ம் தேதி மஸ்கட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல் அளித்துள்ளது.தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அத்துடன் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது, ”என மஸ்கட்டில் உள்ள தூதரகம் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூடு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/SaffronSunanda/status/1813020653823619149
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்