உத்தராகண்ட் நிலச்சரிவில் நூலிழையில் உயிர்தப்பிய 6 தொழிலாளர்கள் வைரல் வீடியோ இதோ
உத்தராகண்ட் நிலச்சரிவில் நூலிழையில் உயிர்தப்பிய 6 தொழிலாளர்கள் வைரல் வீடியோ இதோ
வட இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாமோலி நகரம் மீண்டும் பாதிப்படைந்துள்ளது.நிலச்சரிவுகளால் மூடப்பட்ட சாலைகளில், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிவை அகற்றும் பணி நடைபெற்ற போது மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்ததைக் கண்டு தொழிலாளர்கள் ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது அந்த வீடியோவில் பாறைகள் விழுவதைக் காட்டுகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/AjitSinghRathi/status/1811334475206230352
Tags: வைரல் வீடியோ