Breaking News

69 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்த ரஷ்ய பெண் முழு விவரம் This Mother Gave Birth to 69 Babies

அட்மின் மீடியா
0

 Most prolific mother ever 69 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்த ரஷ்ய பெண் முழு விவரம்



ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் என்பவரின் முதல் மனைவி வாலண்டினா. ரஷ்யாவில் வசித்த வாலண்டினா வாசிலியேவ் என்ற பெண் 1725 மற்றும் 1765 க்கு இடையில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது

இந்தத் தம்பதிகளுக்கு 16 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த வகையில் 32 குழந்தைகள் பெற்றுள்ளார்

அதன்பின்பு அடுத்து 3 குழந்தைகள் என 7 முறை பெற்றுள்ளார் அந்த வகையில் 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 

மேலும் 4 முறை தலா 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 16 குழந்தைகள். இப்படி வாலண்டினாவிற்கு 69 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

4 x 4 = 16

7 x 3 = 21

16 x 2 = 32

என மொத்தம் 69 குழந்தைகள்

இந்தத் தகவலை 1782 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி "நிக்கோல்ஸ் மடாலயம்" எனும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் 1783 ஆம் ஆண்டு "ஜென்டில்மேன்" எனும் பத்திரிக்கையிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவியதை அடுத்து விசாரணை செய்த கின்னஸ் ஆய்வுக்குழு இந்தத் தகவலை உண்மை என நிரூபித்து இருக்கிறது. மேலும் Guinness word Book of Reports புத்தகத்திலும் வாலண்டினாவின் பெயரை இணைத்துள்ளது.

ஆனால் அது குறித்து எந்த புகைப்படமும் ஆதாரமாக இல்லை , அதேபோல் இணையத்தில் இது குறித்து தேடினால் வரும் அனைத்து புகைபடங்களும் அந்த செய்திக்கான அசல் புகைப்படம் கிடையாது

கின்னஸ் சாதனை புத்தக செய்தி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.guinnessworldrecords.com/world-records/most-prolific-mother-ever

Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback