7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை முழு விபரம்
7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வருகிறது. அதில் திமுக கட்சி முன்னிலை வகித்து வருகின்றது
அதேபோல் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றது அதில் 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நிலவரம்:-
மேற்கு வங்கம்:-
ராய்கஞ்ச்,
ரணகாட் தக்சின் (எஸ்சி),
பாக்தா (எஸ்சி),
மணிக்தலா
ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பீகார்:-
ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு,
இமாச்சல பிரதேசம்:-
டேஹ்ரா,
ஹமிர்பூர்,
நலகார்க்,
உத்தராகண்ட்:-
பத்ரிநாத்,
மங்களூரு,
மத்திய பிரதேசம்:-
அமர்வாரா,
தமிழ்நாடு:-
விக்கிரவாண்டி
ஒட்டுமொத்தமாக 13 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் ஆணைய ரிசல்ட் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultByeJuly24/index.htm
இடைத்தேர்தல் வெற்றி பெற்றவர்கள்:-
பஞ்சாப் :
மேற்கு ஜலந்தர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பால் பகத் வெற்றி பெற்றுள்ளார்!
இமாச்சல பிரதேசம்:-
டேஹ்ரா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்!
மேற்கு வங்கம்:-
ராய்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ன கல்யாணி வெற்றி பெற்றுள்ளார்!
பாக்தா (எஸ்சி), தொகுதி இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்மதுப்பூர்னா தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்!
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்