Breaking News

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழப்பு - மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கப்படும் என தகவல்

அட்மின் மீடியா
0
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழப்பு - மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கப்படும் என தகவல்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. 
 
தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது
 

நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,
 
அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலசரிவில் ஏராளமானோர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
மண்சரிவில் சுமார் 500 வீடுகள், மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இதனை அறியாது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர் அப்படியே மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

 
மீட்பு பணி:-
 
மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

மீட்பு பணிகளில் ஈடுபட கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்துள்ளன

கல்பட்டா - வயநாட்டை உலுக்கிய பாரிய நிலச்சரிவின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. வயநாடு முண்டகை மற்றும் சூரல்மாலா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
 
இதுவரை 70 பேர் பலியாகி உள்ளார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிக்கித் தவிக்கும் பகுதிகளுக்கு மீட்புப் படையினர் சென்றுள்ளனர்

நிலச்சரிவு இடத்தில் இடிந்து விழுந்த வீடுகள், , பெரிய மரக்குவியல்கள், மண் மற்றும் குப்பைகள் என நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காட்சியளிக்கிறது. 

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கபப்ட்டுள்ளது 

நிலச்சரிவு தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://www.adminmedia.in/2024/07/blog-post_471.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback