மாந்திரீகம் என்ற பெயரில் இளம் பெண்ணில் தலையில் 77 ஊசிகளை ஏற்றிய சாமியார் நடந்தது என்ன முழு விவரம் Doctors remove 77 needles
மாந்திரீகம் என்ற பெயரில் இளம் பெண்ணில் தலையில் 77 ஊசிகளை ஏற்றிய சாமியார் நடந்தது என்ன முழு விவரம் Doctors remove 77 needles
ஓடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் ரேஷ்மா (19) என்பவரின் தலையில் 77 ஊசிகளை ஏற்றிய சாமியார்.
கடும் தலைவலியால் பெண் அவதியுற்றதையடுத்து ஊசிகளை அகற்றி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!
ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹரா. 19 வயதான இவரின் தாயார் நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவரை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்கள்
இந்த நிலையில் திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அப்போது ரேஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து ரேஷ்மா தலையில் இருந்து இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ