தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல் முழு விபரம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரிகளுக்கு போதுமான மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள், கல்லூரிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். இதனை பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது
தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் 2023 -24ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டன. 2024- 25 கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்