Breaking News

பாவம் செய்த எனது கண்கள் பாவம் செய்து ஆடிய எனது கால்கள் மெக்கா காபாவில் நடிகை மும்தாஜ் உருக்கமான வீடியோ பார்க்க Actress Mumtaz Mecca

அட்மின் மீடியா
0

பாவம் செய்த எனது கண்கள் பாவம் செய்து ஆடிய எனது கால்கள் மெக்கா காபாவில் நடிகை மும்தாஜ் உருக்கமான வீடியோ




தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மும்தாஜ். இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார் மும்தாஜ். அதன் பின்பு  பிஸியான நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார். 

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவில் இருந்து விலகினார்.44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.இந்நிலையில்

நடிகை மும்தாஜ் இரண்டாவது முறையாக மெக்கா புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள மும்தாஜ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 

இறைவன் அருளால் இரண்டாவது முறையாக மெக்கா வந்துள்ளேன். என்னைப் பற்றி இந்த உலகம் என்ன பேசினாலும், நான் தற்போது புதிதாக பிறந்த குழந்தையாக உணர்கிறேன். நீங்கள் மெக்கா, மெதினாவை பாருங்கள். இந்த உலகை நினைத்து கவலைக்கொள்ளாமல் அல்லாஹ்வை நினைத்து வழிபடுங்கள். 

எனது பாவம் செய்த கண்கள் மெக்காவை பார்த்துவிட்டன. ஆடிய கால்கள் காபாவில் நடந்துவிட்டன. என்னால் இதை செய்ய முடியும்போது உங்களாலும் இதனை செய்ய முடியும்.

நல்ல வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுங்கள். அல்லாஹ் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பார். யாருக்காகவும், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.instagram.com/p/C9EPtKjq9Dy/?hl=en

https://www.instagram.com/mumtaz_mumo/?hl=en

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback