இலங்கை அதிபர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு Announcement for Presidential Elections in Sri Lanka
இலங்கையில் 2019 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே சரிவர ஆட்சி நடத்தாததால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து இலங்கை அதிபர், ராஜபக்சே மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகினர்.இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனயும் பதவியேற்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் உதவியால் தற்போதுதான் மீண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் ஏற்கப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்