பாலத்தில் காரை நிறுத்தி திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்.. பகீர் வீடியோ atal setu bridge suicide
கடன் தொல்லையால் அடல் சேது பாலத்தில் காரை நிறுத்தி திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்.. பகீர் வீடியோ atal setu bridge suicide
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் சீனிவாசன் குரு துரி வயது 38 இவர் ஒரு பொறியாளர்.
கடந்த 24 ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு அடல் சேது பாலம் நவா ஷேவா முனையில் தனது டாடா நெக்ஸான் காரை நிறுத்திவிட்டு திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
நவி மும்பை காவல்துறை அடல் சேது மீட்புக் குழுக்கள், கடலோர காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்களுடன் அவரைத் தேடத் தொடங்கியுள்ளது . போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடும் நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அவர் தனது ஆதார் அட்டை மற்றும் லோதாவின் நிறுவன அடையாள அட்டையை வைத்திருந்த பர்ஸ் மட்டும் காரில் விட்டுச் சென்றுள்ளார்.அவர் முந்தைய நாள் இரவு சுமார் 11:30 மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் இறப்பதற்க்கு முன்பு தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளிடம் தொலை பேசியில் பேசியுள்ளார்
இவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் குதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A 38-year-old engineer in Mumbai jumped into the sea from Atal Setu CCTV footage of the suicide has surfaced. This incident took place on 24 July
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/mishika_singh/status/1816307171522728310
அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு உண்டு கலங்காதீர்கள் தற்கொலை எண்ணம் வந்தால் தனியாக இருக்காதீர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பில் 24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்க 104 அவசர உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த எண்ணை தொடர்புகொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ மன நலனுக்கான உதவியை விரும்பினால், ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறவும் பேசவும் தயங்காதீர்கள்.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ