Breaking News

விக்ரவாண்டி இடைதேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி முழு விவரம்

அட்மின் மீடியா
0

விக்ரவாண்டி இடைதேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி  முழு விவரம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றது மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக அன்னியூர் சிவா, பாமக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர் அதில்

திமுக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 

125712 வாக்குகள் 

பாமக சி. அன்புமணி பெற்ற வாக்குகள் 

56248 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி அபிநயா  பெற்ற வாக்குகள் 

10520 வாக்குகள்

இதில் இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளரும், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் உள்ளனர். மேலும் ஆரம்பம் முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்று வந்தார்.

ஒரு தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்ப கிடைக்கும் அந்த வகையில் விக்ரவாண்டியில் பதிவான மொத்தவாக்குகள் 195495 வாக்குகள் அதில் ஆறில் 1 பங்கு வாக்குகள் 32582 வாக்குகள் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultByeJuly24/candidateswise-S2275.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback