ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை முழு விபரம்
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகின்றார்
கடந்த 5 ம் தேதி மாலை ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள் ,மேலும் 3 பேர் கைது செய்யபப்ட்டார்கள்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகின்றார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்