Breaking News

பல ஆண்களை பலரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சத்யா கைது நடந்தது என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

பல ஆண்களை பலரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது நடந்தது என்ன முழு விபரம்


  • தாராபுரத்தில் இளைஞரை திருமணம் செய்து மோசடி செய்த ‛கல்யாண ராணி சத்யா கைது
  • புதுச்சேரியில் பதுங்கியிருந்த சத்யாவை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்
  • சத்யா சுமார் 15க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தாராபுரம் இளைஞர் புகாரளித்தார்




திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருபவர் அரவிந்த் (34). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தநிலையில் ஆன்லைன் ஆப்மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஒத்தக்கடையை சேர்ந்த பழனிசாமியின் மகள் சத்யா (40) என்ற பெண் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் திருமணம் கொண்டனர். 

பின்பு சில நாட்களுக்கு பிறகு சத்யா நகை, பணத்திற்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்றும் சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் அதிர்ச்சி தகவல்  தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பேக்கரி உரிமையாளர் தனது புதுமனைவியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது புகார் கொடுத்தார். 

இந்நிலையில் தனது வழக்கறிஞர் செல்வக்குமார் மூலம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் 

நானும், சத்யாவும் சேர்ந்து அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவோம். தமிழ்ச்செல்வி என்பவரும் உடன் வருவார். அப்போது தான் சத்யாவிற்கு புரோக்கர் தமிழ்செல்வி என்பது எனக்கு தெரியவந்தது.

தமிழ்ச்செல்வி பலமுறை என்னிடம் புரோக்கர் கமிஷன் பெற்றுள்ளார். பின்னர் ஏசி வாங்க வேண்டும் என்று இருவரும் என்னிடம் ரூ.46 ஆயிரம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 20-6-2024 அன்று எனது அலுவலகத்திற்கு சத்யா வந்தார். வீட்டில் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து உள்ளதாகவும் சொல்லி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.என்னை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். உடனடியாக இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 

பின்பு சில நாட்கள் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவி சத்யாவின் நடவடிக்கை பேக்கரி உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சத்யா என்னை மிரட்டினார் . ஆகையால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.

சத்யா மற்றும் புரோகர் தமிழ்ச்செல்வி இருவரும் தலைமறைவாக இருந்தனர். மேலும் சத்யாவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று புதுச்சேரி சென்று அங்கு தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து தாராபுரம் அழைத்து விசாரித்ததையடுத்து கல்யாண ராணி சத்யா மீது கொலை முயற்சி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச் செல்வி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback