Breaking News

ஏர்வாடி தர்காவில் மேளதாளத்துடன் சந்தனகூடு ஊர்வலம் செல்ல உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

அட்மின் மீடியா
0

சந்தனக் கூடு ஊர்வலத்தை  தவ்ஹீத் ஜமாத்தினர் தடுக்கக் கூடாது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி தர்கா மொஹரம் விழாவில் மேளதாளத்துடன் ஊர்வலம் செல்வதை தவ்ஹீத் ஜமாத்தினர் தடுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

சந்தனக் கூடு ஊர்வலத்தின் போது ட்ரம்ஸ் அடித்துச் செல்லக் கூடாது என தவ்ஹீத் ஜமாத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என அந்த ஊரைச் சேர்ந்த தமீம் சிந்தா மதார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்துளார்

அந்த வழக்கு விசாரனையில்  இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் புனிதர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் நினைவாக தர்கா உள்ளது. இது ஏர்வாடி தர்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த மசூதியைத் தவிர ஊரில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன. அவர்களில் தவ்ஹீத் ஜமாத் கொள்கையை சேர்ந்தவர்களும் உள்ளனர்.இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் பிரிவு 19 அவர்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகிறது. மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை தவிர்க்க முடியாது.

கருத்துகள் மாறுபடலாம். நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பக்தியுள்ள முஸ்லிம்களாக உள்ளனர் மனுதாரர் குழு ஊர்வலமாகச் செல்வதை தடுக்க தவ்ஹீத் ஜமாத்க்கு உரிமை இல்லை. எனவும் ஒருவரது அடிப்படை உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளானால், அதனை தடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை  என நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்உத்தரவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback