Breaking News

ஆற்றில் திடீரென அதிகரித்த வெள்ளம் ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த இரு சிறுவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் திக் திக் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

கேரளாவில் திடீரென அதிகரித்த வெள்ளம் ஆற்றில் சிக்கி தவித்த இரு சிறுவர்கள் மீட்பு திக் திக் வீடியோ இணைப்பு



பாலக்காடு சித்தூர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளே சிக்கிய சிறுவர்களை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டித்தாவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபினவ் கிருஷ்ணா, இவருக்கு வயது 13, மற்றும் அஜி, இவருக்கு வயது 15. இவர்கள் இருவரும் சித்தூர் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தீடீரென அதிகரித்த வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்ட்னர் ஆனால் இருவரும் ஆற்றின் நடுவில் உள்ள பாறை மீது ஏறி நின்று கொண்டனர்.

தீயணைப்பு படையினர் ஆற்றில் ஏணியை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏணியின் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அப்பகுதி மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரையும் கரை சேர்த்தனர்.

இது குறித்து தீயனைப்பு வீரர்கள் கூறியது குழந்தைகள் நீண்ட நேரம் ஆற்றில் வைத்திருப்பது கடினம் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் நாங்கள் வேலையை மிக வேகமாகத் தொடங்கினோம்.  அதிக நீரோட்டத்தில், கயிறுகள் பயனற்றதாகிவிடும், மேலும் ஏணி மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், சித்தூர் ஆற்றில் இறங்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ImowRUgiLM8

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback