மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு முழு விவரம்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின்கீழ் கீழ் காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 19.07.2024 முதல் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
செவிலியர்
பல் உதவியாளர்
ஊர்தி ஓட்டுநர்
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)
Audiometrician
Speech Therapist
Audiologist
மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)
பாதுகாவலர் (Security Guard
கல்வி தகுதி:-
செவிலியர் பணிக்கு செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் (B.Sc., Nursing) செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
பல் உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் மருத்துவருடன் பணிபுரிந்தமைக்கான முன் அனுபவ சான்றுடன் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊர்தி ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இரண்டு வருட முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தரவு உள்ளீட்டாளர் பணிக்கு இளங்கலை கணிணி அறிவியல்/கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு/முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு - தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ். உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாதுகாவலர் பணிக்கு 8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
1. இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த பணியாகும் (11 மாதங்கள்)
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
3. தற்காலிக ஒப்பந்த பணி என்பதற்கான உறுதிமொழி கடிதம் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 31.07.2024 - புதன்கிழமை மாலை 5.00 மணிக்குள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி 620 020. தொலைபேசி எண். 0431-2333112
குறிப்பு: 1. விண்ணப்பங்கள் நேரிலோ / பதிவு தபால் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
2. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/07/2024071827.pdf
Tags: வேலைவாய்ப்பு