விவசாயி உள்ளே விட மறுத்த மாலை மூட அதிரடியாக உத்தரவு
ஷாப்பிங் மாலுக்கு வேஷ்டி கட்டிகொண்டு வந்த விவசாயி உள்ளே விட மறுத்த காவலாளி வைரல வீடியோ
பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான ஜிடி மாலுக்கு நேற்று மாலை விவசாயி ஒருவர் வேஷ்டி அணிந்தவாறு தனது மகனை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார்.
கையில் படம் பார்க்க டிக்கெட் இருந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்தபோது மாலின் காவலாளி வேஷ்டி அணிந்திருந்த காரணத்தினால் அவரை உள்ளே விட முடியாது என்று காவலாளி தெரிவித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த அவமானத்தை வீடியோ எடுத்து மகன் மூலமாக அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் அந்த விவசாயி. இந்த வீடியோ வைரலாகி வருகின்றது
இதையடுத்து கன்னட ஆதரவாளர்களும் கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த
சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த மால் ஒரு வாரத்திற்கு
செயல்பட கூடாது என கூறி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/SVishnuReddy/status/1813784852153696340
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ