புதன் கிரகத்தில் வைர சுரங்கம் கண்டுப்பிடிப்பு - விஞ்ஞானிகள் தகவல்!
பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் அதிக அளவில் வைரம் இருப்பதாக சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல். ஆனால், அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க வாய்ப்பு இல்லை என விளக்கம்!
சூரிய குடும்பத்தில் முதலாவதாக இருக்கும் புதன் கிரகம் கருப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. புதனின் காந்தப்புலம் பூமியை விட மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இந்த கிரகம் கருப்பாக இருப்பதற்கு, அதில் இருக்கும் கிராஃபைட் தான் காரணம். பெல்ஜியம் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது.
புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தெரிகிறது.அதீத வெப்பநிலை மற்றும்அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்க வாய்ப்பு உள்ளது.
அத்துடன், புதன் கிரகத்தின் மேல்தட்டு சுமார் 80 கி.மீ., ஆழமாக இருக்கலாம் என்றும், அதீத வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அதுவும் அந்த வைர படிவத்தின் தடிமன் 15 கி.மீ., இருக்கும் என்றும் கணித்துள்ளனர். ஆனால், இந்த வைரங்களை வெட்டி எடுப்பதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், புதனின் மேற்பரப்பில் இருந்து பல கிலோ மீட்டர் ஆழத்தில் வைரப் படிவங்கள் இருப்பதால், அதை மனிதர்களால் பயன்படுத்த முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்