குழந்தையை மிருகத்தனமாக தாக்கும் தாய் என பரவும் வீடியோ எங்கு நடந்தது முழு விவரம்
அட்மின் மீடியா
0
குழந்தையை மிருகத்தனமாக தாக்கும் இந்த குந்தாணி அரக்கி படுபாதகி என பரவும் வீடியோ எங்கு நடந்தது முழு விவரம்
பரவிவரும் செய்தி:-
இந்த குந்தாணி அரக்கி படுபாதகி இவள் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை இந்த வீடியோ காவல்நிலையம் சென்று சேரும்வரை பதிவிடவும்
அந்த வீடியோவில்:-
ஒரு தாய் தனது 8 வயது குழந்தையின் முதுகில் குத்துகின்றாள் அந்த குழந்தை வலியால் அலறுகின்றது அதன் பிறகு, குழந்தையின் தலைமுடியைப் பிடித்து, அந்தப் பெண் மீண்டும் மீண்டும் தலையைத் தரையில் அடிக்கிறார்.அப்போது அந்த பெண் சத்தம் போட்டு வீடியோ எடு வீடியோ எடு என கூறியுள்ளார்.
அந்த இளம் பையன் அழுவதையும், தன்னை விடுமாறு அந்தப் பெண்ணிடம் கெஞ்சுவதையும் காணலாம், ஆனால் அவள் அவனைப் புறக்கணித்து அவனைத் தொடர்ந்து அடிக்கிறாள்.
குழந்தை முதலில் அம்மாவிடம் தண்ணீரைக் கேட்கிறது. அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் பலமுறை அறைந்தபோது, "அம்மா, எனக்கு முதலில் தண்ணீர் கொடுங்கள்" என்று அவர் கெஞ்சுவதைக் கேட்கலாம். பின்னர் குழந்தையின் மார்பின் இருபுறமும் அந்தப் பெண் கடித்துள்ளார்.
பின்னர் தாய் தனது கைகளால் சிறுவனை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சிக்கிறார் பெண் கழுத்தை நெரித்ததால் சிறுவன் மூச்சுத் திணறுவதைக் காணலாம்.
வீடியோவை பதிவு செய்த நபர் குழந்தை இறந்துவிடும் என்று சத்தம் போட, அந்த பெண் அவரை விடுவித்தார். குழந்தை மீண்டும் ஒரு முறை தண்ணீருக்காக கெஞ்சுகிறது,
அந்தப் பெண் அவனை அறைந்து குத்தினாள்.தாய் தன் சித்திரவதையை நிறுத்திவிட்டு, குழந்தை எழுந்து அவளிடமிருந்து ஓடத் தொடங்கும் போது அவனை உதைத்தாள். தாயின் இந்த கொடூரமான நடத்தை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை ஏன் அடித்தார்:-
உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஜப்ரேடாவில் உள்ள ரூர்க்கியில் வசித்து வரும் அந்த குழந்தையின் தாய்க்கு 3 மகன்கள் தனது கணவரை மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்.
அவர் தனது மூன்று மகன்களுடன் ஜப்ரேதாவில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் மற்றும் உள்ளூர் துணிக்கடையில் வேலை செய்கிறார்.
பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் தனது மூன்று மகன்களை வளர்ப்பதில் சிரமப்படும் இந்த பெண், தனது ஒரு மகனிடம் வீடியோ எடுக்க கூறி மற்றோரு மகனை கீழே தள்ளி கொடூர செயலில் ஈடுபடுகிறார். மேலும் இந்த வீடியோவை தனது கணவருக்கு அனுப்புவதால் தனது நிலையை அவர் அறியக்கூடும்,
மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கணவரை பயமுறுத்துவதற்காக அவரின் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவார் என்ற எண்ணத்தில் தனது குழந்தையை அடிப்பது போல் நடித்து வீடியோவை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.அந்த வீடியோவை அவரது கணவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்
அந்த வீடியோ வைரலானதை தொடந்ர்து ஹரித்வார் போலீசார் விசாரணையில் இறங்கினர்
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
அந்த வீடியோ கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பழமையானது என்று தெரிவித்தனர். ஒரு சமூக ஊடக பதிவில், வீடியோவில் உள்ள பெண், தனது 8 வயது மகனை தாக்கியதாகவும், உத்தரபிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரை பயமுறுத்துவதற்காக முழு விஷயத்தையும் அரங்கேற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் வீட்டுச் செலவுகளுக்குப் பங்களிக்கவில்லை எனவும் அப்பெண் கூறியதாக போலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகள் நலக் குழுவுக்கு (CWC) தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன் பிறகு அந்தப் பெண் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இன்று குழந்தைகள் நலக் குழு முன்பாக பெண் மற்றும் குழந்தையின் 'முதல் கட்ட கவுன்சிலிங்' நடந்தது. மேலும் அவருக்கு பல கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்
ஹரித்வார் போலீசார் செய்தி பார்க்க :-
https://x.com/haridwarpolice/status/1813596812483449061
Tags: FACT CHECK இந்திய செய்திகள் வைரல் வீடியோ