வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜும்மாவில் உதவிக்கரம் நீட்டுவோம்! தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜும்மாவில் உதவிக்கரம் நீட்டுவோம்! தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு
இது குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;-
கண்ணியமிகு ஆலிம்பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ...
நமது அண்டை மாநிலம் கேரளத்தில் நேற்று (30.07.2024) அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் இருநூறுபேர் இறந்திருக்கக்கூடும் என்றும் பலவீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமாக மண்ணில் புதைந்திருக்கின்றன என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
உயிரிழப்பும் பொருள் இழப்பும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் இன, மொழி, மாநில உணர்வுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டுவதும் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுவதும் இஸ்லாம் வலியுறுத்தும் உன்னத வழிகாட்டுதலாகும்.
எனவே எதிர்வரும் 02.08.2024 மற்றும் 09.08.2024 ஆகிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஒன்றில் ஜுமுஆ தொழுகைக்குப் பின்னர் பொதுமக்களிடம் இதுகுறித்து வலியுறுத்தி அறிவிப்புச் செய்து வசூலித்து, கிடைக்கும் நிதியை வட்டாரங்கள் வழியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து மாநில நிர்வாகத்திற்கு கிடைத்திட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்