Breaking News

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு நடந்தது என்ன முழு விவரம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவுசாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர் 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவையில்லை என உத்தரவு முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைதுநெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு  நடைபெற்று முடிந்தது. 

நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback