Breaking News

பள்ளி வாகனம் ஓட்டும்போது ஏற்பட்ட மாரடைப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழந்தார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பள்ளி வாகனம் ஓட்டும்போது ஏற்பட்ட மாரடைப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழந்தார் முழு விவரம்

பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன் உயிரிழந்தார்.

இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார். 



திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (49). இவர் வெள்ளக்கோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மலையப்பன் நேற்று மாலை பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார். அதே பள்ளியில் மலையப்பனின் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் அந்த வேனில் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டு செல்லும் உதவியாளாரக வேனில் சென்றுள்ளார்

வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, மலையப்பன் ஸ்டியரிங்கிலேயே மயங்கி சரிந்துள்ளார். 

இதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் மனைவி லலிதா பெரும் அதிர்ச்சி அடைந்தனர் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலையப்பனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

இந்நிலையில் இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback