சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி விபத்து நீலகிரி மாவட்ட நீதிபதி உயிரிழப்பு முழு விவரம்
சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி விபத்து நீலகிரி மாவட்ட நீதிபதி உயிரிழப்பு முழு விவரம்
பொள்ளாச்சியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார்.
சாலையை கடக்க முயன்ற நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதியது. நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விட்டு நிற்காமல் சென்ற நபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி இவருக்கு வயது 58 இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது சொந்த வேலை காரணமாக உடுமலை சாலையில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நீதிபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மேலும் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த நீதிபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்