தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய அட்மின் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் கைது முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய அட்மின் கைது முழு விவரம்
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்
திரையில் ரிலீஸ் செய்யும் புதிய படங்களை முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் தியேட்டர்களில் பெருமளவு வசூல் பாதிப்பதாகவும் ஏராளமானோர் இலவசமாக இணைய தளங்களில் பார்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தியேட்டருக்கு சென்று புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார் என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் ரெக்கார்டு செய்துகொண்டிருந்த மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது
குருவாயூரப்பன் அம்பல நடையில் படத்தை பதிவேற்றம் செய்தது தொடர்பாக தயாரிப்பாளர் பிரிதிவிராஜன் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்