Breaking News

அடுத்து அடுத்து வந்த புகார்கள் போலி சான்றிதழ் சர்ச்சை பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

அடுத்து அடுத்து வந்த புகார்கள் பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து! முழு விவரம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்றார். யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் வைத்து சென்றார் ,மேலும் அந்த காரில் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கரும் ஒட்டினார். அதேபோல் தனக்கு என்று தனி அலுவலகம், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி தனது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்தை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.அவரை பற்றிய புகார்கள் வர தொடங்கியதை அடுத்து அவர் வாஷிம் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர்  மாற்றப்பட்டார்.


மேலும் தற்போது அடுத்த சர்சையில் சிக்கியுள்ளார் அதாவது பூஜா கேத்கர் பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு மற்றும் மன இறுக்க பிரச்சனை உள்ளதாக இருப்பதாக கூறி பிடபிள்யூபிடி எனும் மாற்றுத்திறனாளிகளின் கோட்டாவில் பணிக்கு சேர்ந்துள்ளார் , எனவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவை சேர்ந்தவர் எனவும், அதோடு சாதி இட ஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகள் பெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏன் என்றால் அவரது தந்தை முன்னாள் அரசு அதிகாரி என்பது, அவருக்கு பலகோடியில் சொத்து இருப்பதும் தெரியவந்தது. 

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரித்து வந்த நிலையில், பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை மத்திய அரசு ரத்து செய்தது. சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கர், முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் 23-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் கத்ரே அனுப்பியுள்ள கடிதத்தில், “உங்களின் உதவி ஆட்சியர் பயிற்சி திட்டத்தை நிறுத்திவைக்க முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகம் முடிவு செய்துள்ளது. வரும் 23-ம் தேதிக்கு முன் லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback