உணவு ஆர்டரை டெலிவரி செய்ய வந்த ஊழியரை கடித்து குதறிய தடைசெய்யப்பட்ட பிட்புல் நாய்கள் அதிர்ச்சி வீடியோ
உணவு ஆர்டரை டெலிவரி செய்ய வந்த ஊழியரை கடித்து குதறிய தடைசெய்யப்பட்ட பிட்புல் நாய்கள் அதிர்ச்சி வீடியோ
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வீட்டில் உணவு டெலிவரி செய்ய சென்றவரை தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாய்கள் கடித்து குதறுக் காட்சியும் அவர் உதவி கேட்டு அலறியவாறு கார்மீது ஏறி நிற்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அந்த வீடியோவில் ஒருவரின் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய ஊழியர் சல்மான்கான் வந்தபோது அந்த வீட்டில் இருந்த 2 பிட்புல் வகை நாய்கள் அவரை கடித்ததால் வலி பொறுக்க முடியாம்ல் கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டார்.
உதவிக்கு யாரும் வராததால் கேட்டை திறந்து கொண்டு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஏறி தன்னை காத்துக்கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு ஏற்கனவே பிட்புல் உட்பட 23 வகையான நாய் இனங்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/DGCOONNHRF/status/1813845035345137782
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ