Breaking News

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட புதிய சிசிடிவி காட்சி வெளியீடு! இதுவரை வெளிவராத அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு


பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கும் காட்சி மற்றும் அவரைக் கொல்ல நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளில் கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர்

இந்த சிசிடிவி காட்சியில் இன்று காலையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடமும் உள்ளார்



தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ம்தேதி  அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

இந்நிலையில் தற்போது என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்யும் புதிய சிசிடிவி வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக வெளியான சிசிடிவி காட்சியில் கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வெளியான புதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/kani_twitz24/status/1812386389654466869

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback