சத்திரிய சான்றோர் படை எனும் புதிய கட்சியை தொடங்கிய ஹரி நாடார் முழு விபரம்
சத்திரிய சான்றோர் படை எனும் புதிய கட்சியை தொடங்கிய ஹரி நாடார் முழு விபரம்
காமராஜரின் பிறந்தநாளான நேற்று சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக ஹரி நாடார் தெரிவித்துள்ளார் ராக்கெட் ராஜாவுடன் இணைந்து பனங்காட்டுப்படை கட்சி நடத்தி வந்த ஹரி நாடார், 2021 இல் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 37,724 வாக்குகள் பெற்றிருந்தார்.
தேர்தலுக்குப் பின்னர் பல்வேறு வழக்குகளில் சிக்கி 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஹரி நாடார் அண்மையில் வெளிவந்தார். இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை கொண்ட தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வந்த ஹரி நாடார், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஆலங்குளம் தொகுதி மக்கள் எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தனர். எனவே ஆலங்குளத்தில் வைத்து, சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் தனது புதிய கட்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் கட்சிக் கொடி, நிர்வாகிகள் குறித்த விவரத்தை அறிவிப்பேன் என்றார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்