Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு விண்ணப்பம் - என பரவும் படிவம் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு விண்ணப்பம் என பரவும் படிவம் உண்மை என்ன 

பரவி வரும் பொய்யான தகவல்:-

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி ஒரு வலைதளங்களில் பகிரப்படுகிறது. படிவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது



உண்மை என்ன?

இதுபோன்று எந்த விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து 30 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு செய்தி வெளியிட்டுள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://kmut.tn.gov.in/faq.html

11. மேல் முறையீடு

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். இதற்கான இணையதளம் முகவரி அறிவிக்கப்படும். இ.சேவை மையங்கள் வழியாக மேல் முறையீடுகளைச் செய்யலாம்.

11.1 மேல் முறையீட்டு அலுவலர்

வருவாய் செயல்படுவார். கோட்டாட்சியர் மேல்முறையீடு அலுவலராகச்

11.2. மேல் முறையிட்டுச் சரிபார்ப்பு நடைமுறைகள்

இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். இம்மேல்முறையீடுகளுக்குக் களஆய்வு தேவைப்பட்டால் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

in வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய வட்டாட்சியர் அறிக்கை பெற்றுத் தீர்வு செய்ய வேண்டும்.

ii இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாகச் செய்யப்படும். நேரடியாக மனு பெற்று தீர்வு செய்யக்கூடாது.

iv) மேல்முறையீடு தீர்வு செய்தல் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும்.

113. மேல் முறையீட்டுக் கால அளவு

மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீர்வு செய்யப்படும். மேல் முறையீடு செய்ய கால அளவு நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்கு மிகாமல் இருப்பதை வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வினை அவ்வப்பொழுது நடத்தி விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும்.

12. குறை தீர்ப்பு (Grievance redressal

விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு கீழ்க்காணும் குறை தீர்ப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

12.1 கட்டுப்பாட்டு அறை

i) பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் எண்களை மக்கள் அறியும்வண்ணம் விளம்பரப்படுத்த

Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback