தி.நகரில் தொழில் வரி , சொத்துவரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் முழு விவரம்
தி.நகரில் தொழில் வரி , சொத்துவரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் முழு விவரம்
தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.1.5 கோடி சொத்துவரி செலுத்தாததால் 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சென்னை தியாகராய நகருக்குச் சென்றனர். அங்கு ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் (ரூ.37 லட்சம் நிலுவை) சண்முகா ஸ்டோர் (ரூ.28 லட்சம் நிலுவை) மற்றும் டாக்டர் நாயர் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் சுமார் ரூ.90 லட்சம் நிலுவை வைத்துள்ள 38 கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.
தற்போது சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் இனியும் வரியை செலுத்தாமல் தாமதித்தால், நோட்டீஸ் வழங்கி, சொத்துக்களுக்கு சீல் வைக்கப்படும். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அது தொடர்பான வலுவான விதிகள், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் காலத்தோடு சொத்துவரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்