ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது முழு விவரம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் திருவேங்கடம் என்ற நபர் தப்பியோட முயன்றதற்காக சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை என்பவரை போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வந்தநிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் அருளின் செல்போனை வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்