Breaking News

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை - முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

அட்மின் மீடியா
0

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை - முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்



உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, http://exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டுள்ளது

நீட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வந்த விசாரணையில் ஹசாரிபாக் தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், மாணவர்களின் பெயர்களையும், எண்களையும் மறைத்து மையங்கள் வாரியான நீட் தேர்வு முடிவுகளை பொதுவெளியில் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மையங்கள் வாரியான முடிவுகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் தேசிய தேர்வு முகமையின் இணையத்தில் பதிவேற்றம் செய்யவும், உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உத்திரவிட்ட நீதிபதிகள், நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேர்வு முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://neet.ntaonline.in/frontend/web/common-scorecard/index

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback