தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா ராஜினாமா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா ராஜினாமா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்து வருபவர் யுவராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமாகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜா கட்சியின் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய போது யுவராஜாவும் காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமாகா, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த சமயத்தில் யுவராஜா நேரடியாக சேலத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து சர்ச்சைகளை உண்டாக்கி இருந்தது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா , 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார்
இந்நிலையில் இளைஞரணித் தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்துள்ளார் யுவராஜா.
Tags: அரசியல் செய்திகள்