மாமியார் வீடு சென்ற மனைவியை சந்திக்க அரசு பேருந்தை மாமியார் வீட்டிற்கு ஓட்டி சென்ற நபர் முழு விவரம்
ஆந்திராவில், மனைவியை சந்திக்க அரசு பேருந்தை மாமியார் வீட்டிற்கு ஓட்டி சென்ற நபர் பாதி வழியில் பேருந்தை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆத்மகூறு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து திடீர் என மாயமானது
இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து காலையில் வந்து பார்த்த போது காணாமல் போனதைக் கண்டு பதறிப்போன பேருந்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் பேருந்து ஊழியர்கள் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது, ஆள் இல்லாமல் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டு இருப்பதாக வந்த தகவலை வைத்து போலீசார் பேருந்தை மீட்டனர். பேருந்தை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆந்திர பிரதேசத்திலுள்ள நந்தியால் மாவட்டம் வேங்கடபூர் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையா. லாரி ஓட்டுநரான இவரது மனைவி இவரை விட்டுப்பிரிந்து தனது தாயாருடன் முச்சுமர்ரி பகுதியில் தங்கியுள்ளார் எனது மனைவியை காண்பதற்காக புறப்பட்டு இரவு ஆத்மகுரு பேருந்து நிலையம் வந்த போதும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் விரக்தியடைந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தினை எடுத்து செல்லலாம் என யோசனை வந்தது லாரி ஓட்டுநரான நான், பேருந்தில் ஏறி ஸ்டார்ட் செய்தேன். அப்போது பேருந்தும் இயங்கியது. இதனால், பேருந்தை எடுத்து வந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்