Breaking News

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு முழு விவரம்



2024 - 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வறையில் எழுதிய மாணவர்கள் மோசடி, அதிக மதிப்பெண் குளறுபடிகள் என பல்வேறு முறைகேடு புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. 

இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் பலர் வழக்கு தொடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீட் தேர்வு தொடர்பான தனது இறுதி முடிவுகளை தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனையடுத்து தற்போது நடப்பு கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியை மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது

அகில இந்திய இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 23 ம் தேதி வரையிலும், 

அகில இந்திய இடங்களுக்கு 2 ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5 ல் தொடங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை அகில இந்திய இடங்களுக்கான 3 ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், 29 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. 

மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், 3-வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு  ஆக., 8 வரை 

https://tnmedicalselection.net/

https://tnhealth.tn.gov.in/

ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback