Breaking News

சிவகங்கையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சிவகங்கையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை நடந்தது என்ன முழு விவரம்

 


சிவகங்கை தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் 

சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் வயது 53 இவர் பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்டச் செயலராக இருந்து வந்தவர் வேலாங்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (53). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் செல்வகுமாரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிவகங்கை தாலுகா காவல் துறையினர் அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback