குழந்தை வரம் தந்த ஆஞ்சநேயருக்காக கோவில் கட்டும் இஸ்லாமிய சகோதர்கள் வீடியோ இணைப்பு
குழந்தை வரம் தந்த ஆஞ்சநேயருக்காக கோவில் கட்டும் இஸ்லாமிய சகோதர்கள் வீடியோ இணைப்பு
ஆந்திராவில் 2 இஸ்லாமிய சகோதரர்கள் இந்து கடவுளான ஆஞ்சநேயருக்கு எதிர்ப்புகளை தாண்டி அப்பாவின் கனவை நனவாக்கும் நோக்கத்தில் பிரமாண்டமாக கோவில் கட்டி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் புலிச்சேரல் மண்டலம் கே.கோத்பேட்டா கிராமத்தைச் சேர்ந்த ஃபெரோஸ், சந்த் மற்றும் பாஷா சகோதர்கள், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அனுமனுக்கு கோயில் கட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறியது:-
ஃபெரோஸ், சந்த் மற்றும் பாஷா சகோதர்களின் தாத்தாவுக்கு குழந்தை இல்லாததால் அவர் ஒரு சாமியாரை சந்தித்துள்ளார். அப்போது அந்த சாமியார் அனுமனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அதன்பின்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது .அவர்தான் பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோரின் தந்தை அஜித் பாஷா
அதனை தொடர்ந்து அஜித் பாஷா அனுமனுக்கு கோவில் கட்ட முடிவு செய்து அதற்க்கான பணியை கடந்த 2010ம் ஆண்டு தொடங்கினார். ஆனால், உறவினர்களின் கடும் எதிர்ப்பால், கோவில் கட்டும் பணியை அப்படியே விட்டு விட்டார்.
தற்போது தந்தை அஜித் பாஷா காலமான நிலையில் அவரது ஆசையை நிறைவேற்ற அவரது மகன்கள் பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோர் அனுமன் கோவில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அனுமன், விநாயகர், சாய்பாபா சன்னதிகள் அருகருகே கட்டப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் இந்துகடவுள்களுக்கு கோவில் கட்டுவது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=KVnJ8_jF-o8
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வைரல் வீடியோ